search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை நடக்கும் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்: எம்.எல்.ஏ. அனிதாராதாகிருஷ்ணன்
    X

    நாளை நடக்கும் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்: எம்.எல்.ஏ. அனிதாராதாகிருஷ்ணன்

    மத்திய அரசை கண்டித்து நாளை ஆத்தூர் முதல் திருச்செந்தூர் வரை தி.மு.க. சார்பில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என எம்.எல்.ஏ. அனிதாராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆரோக்கியசெல்வராஜ், மகராஜன், தங்கசெல்வி, புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-

    இயக்கத்தில் போட்டிகள் இருக்க வேண்டும் பொறாமை இருக்ககூடாது. என்னை யாரும் அசைத்து பார்க்க நினைத்தால் அது நடக்காது. நியாமான தொண்டர்களுக்கு எந்த இடர்பாடுகள் வந்தாலும் உங்களோடு உறுதுணையாக இருப்பேன். ஓட்டப் பிடாரத்தில் தி.மு.க.வை யாரும் அசைக்கமுடியாது. அவர் வந்தால் தான் வெற்றிபெறமுடியும் என்ற நிலை மாறி தி.மு.க. வந்தால் தான் வெற்றி பெறமுடியும் என்ற நிலை உருவாகவேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு யார் காரணம் என கண்டறிந்து அவர்களை உடனடியாக தூக்கி எறிவேன்.

    அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 30 ஆயிரம் வாக்கு வித்தியசத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் மாவட்ட செயலாளர் பதவிலிருந்து விளக்கி கொள்வேன். இந்த இயக்கம் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த இயக்கத்தில் இருக்கவேண்டும். அதே போலத்தான் தானும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்பேன். மத்திய அரசை கண்டித்து நாளை ஆத்தூர் முதல் திருச்செந்தூர் வரை நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வே இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜமன்னார், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் இளையராஜா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை, கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகராஜன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பூபதி, தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.டி.சி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் செந்தூர்மணி, முன்னாள் யூனியன் தலைவர் கருணாகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர்கள் ஆரோக் கியரவி, பிலைவேந்தராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் செல்வகணேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×