search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே போலீசார் வாகன சோதனை: கேரளாவுக்கு லாரியில் ஏற்றி சென்ற 22 மாடுகள் பறிமுதல்
    X

    கோவை அருகே போலீசார் வாகன சோதனை: கேரளாவுக்கு லாரியில் ஏற்றி சென்ற 22 மாடுகள் பறிமுதல்

    கோவை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற மாடுகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் மலுமிச்சம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் அதிக அளவில் மாடுகளை ஏற்றி வருவதை போலீசார் கண்டனர். உடனடியாக அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் 19 எருமை மாடு, 3 காளை மாடு என 22 மாடுகள் இருந்தன.

    விசாரணையில் கர்நாடகாவில் இருந்து இந்த மாடுகளை ஏற்றி கேரள மாநிலம் வயநாட்டுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. லாரியில் மாடுகளுக்கு தேவையான தண்ணீர், உணவு, முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இல்லை என்பதால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் லாரி டிரைவரான கர்நாடக மாநிலம் தூம்கூர் மாவட்டத்தை சேர்ந்த அப்சர் (வயது 33) என்பவரை கைது செய்தனர். லாரி உரிமையாளரான பெங்களூரை சேர்ந்த சாதிக் பாட்சா என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை திருப்பூர் மாவட்டம் கரடிவாடியில் உள்ள கோசாலையில் போலீசார் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×