search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூர் போராளி இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்
    X

    மணிப்பூர் போராளி இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்

    தீவிர அரசியல் மற்றும் போராட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த மாதம் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளதாக மணிப்பூர் சமூக போராளி இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.
    கொடைக்கானல்:

    தீவிர அரசியல் மற்றும் போராட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த மாதம் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளதாக மணிப்பூர் சமூக போராளி இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூக போராளி இரோம் சர்மிளா. அந்த மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி நிறைவாக அதனை கைவிட்டு மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

    ஆனால் அவருக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து அரசியல் மற்றும் போராட்ட வாழ்க்கை களத்தில் இருந்து விலகினார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொடைக்கானலில் வசித்து வருகிறார். கொடைக்கானல் அருகே உள்ள பெரும்பாறையில் வசித்து வந்த அவர் தற்போது கொடைக்கானல் நகர் பகுதியில் தங்கி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது அரசியல் போராட்டங்களில் இருந்து முற்றிலும் விலகி விட்டேன். எனது போராட்டங்கள் பற்றி பர்னிங்ஆப் பிரைட் என்ற புத்தகத்தை எழுதினேன். அதனை படித்த அயர்லாந்தை சேர்ந்த தேஸ்மாண்ட் ஹட்டின்கோ என் மீது விருப்பப்பட்டார்.

    அவர் என்னிடம் தனது காதலை தெரிவித்தபோது அதனை ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

    இந்து, கிறிஸ்தவ முறைப்படி எங்கள் திருமணம் ஜூன் மாதம் கொடைக்கானலில் நடக்கும். திருமணத்திற்கு பிறகும் நாங்கள் கொடைக்கானலிலேயே தங்கி இருப்போம். இனி எங்களது வாழ்க்கை இப்பகுதியிலேயே தொடரும்.

    இங்குள்ள இயற்கையான சூழ்நிலை, தூய்மையான காற்று, மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை என்னை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் என்னால் இங்கு சுதந்திரமாக சாலையில் நடந்து செல்ல முடிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×