search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் வெற்றி
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் வெற்றி

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் வெற்றி பெற்றன. #BBL07 #SydneyThunder #PerthScorchers
    பிரிஸ்பேன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. மெல்போர்னில் நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 57 ரன்களும், செப் கோட்ச் 31 ரன்களும் எடுத்தனர். சிட்னி அணி பந்துவீச்சில் கிறிஸ் கிரீன் 2 விக்கெட்களும், மிச்செல் மெக்லினகன், குரிந்தர் சந்து, ஷேன் வாட்சன், பவாத் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. சிட்னி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 44 ரன்களிலும், ஜேம்ஸ் வின்ஸ் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷேன் வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடன் களத்தில் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிட்னி அணி 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் அணி பந்துவீச்சில் லியாம் போவே 2 விக்கெட்களும், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்ததாக பெர்த்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஹோபார்ட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ஹோபார்ட் அணி பேட்டிங்கில் சைமன் மிலன்கோ 66 ரன்களும், ஜார்ஜ் பெய்லி 37 ரன்களும், மேத்தீவ் வேட் 31 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணி பந்துவீச்சில் மேத்தீவ் கெல்லி, ஆஷ்டன் அகார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும், ஜோயல் பாரிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாம் வைட்மேன் 1 ரன்னிலும், மைக்கெல் கிளிங்கர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கெமரான் பான்கிராப்ட் நிதானமான ஆட்டத்தை வெளிகாட்டினார். அடுத்து களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரைட் 17 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் பான்கிராப்ட்-உடன், ஆஷ்டன் டர்னர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரைசதம் கடந்தனர்.

    பான்கிராப்ட் 54 ரன்களில் ஆட்டமிழக்க, டர்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து பெர்த் அணியை வெற்றிபெற செய்தார். பெர்த் அணி, 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் வெற்றி பெற்ற சிட்னி தண்டர் அணி, எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #SydneyThunder #PerthScorchers
    Next Story
    ×