search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: விராட் கோலி
    X

    பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: விராட் கோலி

    பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தொடரை இழக்க நேரிட்டது என விராட் கோலி கூறியுள்ளார். #SAvIND #ViratKohli
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான செஞ்சூரியன் டெஸ்டில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், மோசமான பீல்டிங்காலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி முன்னிலை பெற தவறிவிட்டோம். எங்களுடைய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் நாங்கள் சரிவை சந்தித்தோம்.

    பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ஆனால், பேட்ஸ்மேன்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர். நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். அந்த முயற்சி போதுமான அளவிற்கு இல்லை. குறிப்பாக பீல்டிங் துறையில் கோட்டை விட்டோம். தென்ஆப்பிரிக்கா அதில் வெற்றி பெற்றுவிட்டது.



    ஆடுகளம் மிகவும் பிளாட் என நினைத்தோம். விளையாடும்போது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பு ஆடுகளம் எப்படி இருந்ததோ, அதில் இருந்த முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது என்று சக வீரர்களிடம் கூறினேன்.

    குறிப்பாக முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆன பிறகு, அதை நாங்கள் சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் ஆடுகளத்தில் செயல்படுத்த விரும்பினேன். அந்த வகையில்தான் விளையாடினேன்.



    தற்போது நான் அடித்த 153 ரன்கள் பெரிய விஷயம் அல்லை. ஏனென்றால் நாம் தொடரை இழந்துவிட்டோம். அணி வெற்றி பெற்றிருந்தால் 30 ரன்கள் கூட முக்கியமானதாக இருந்திருக்கும். ஒரு அணியாக ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும்’’ என்றார். #SAvIND #ViratKohli
    Next Story
    ×