search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட்: இந்தியா பவுலிங்- தவான், சஹா, புவனேஸ்வர் குமார் நீக்கம்
    X

    செஞ்சூரியன் டெஸ்ட்: இந்தியா பவுலிங்- தவான், சஹா, புவனேஸ்வர் குமார் நீக்கம்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இந்தியா டாஸ் தோற்று பந்து வீசி வருகிறது. #SAvIND #KLRahul #Bhuvi #saha
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    கேப் டவுன் டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட்  ஆகும்.

    இந்திய அணியில் தவான், விக்கெட் கீப்பர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா 12 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 25 ரன்னுடனும், டீன் எல்கர் 9 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். #SAvIND #KLRahul #Bhuvi #saha
    Next Story
    ×