search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றம்
    X

    இந்திய மண்ணில் முதன்முறையாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றம்

    கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளனர்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மழைக்காரணமாக முதல் இரண்டு நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது.

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இலங்கை அணியில் ஹெராத், தில்ருவான் பெரேரா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா 110.1 ஓவர்கள் (83.4 மற்றும் 26.3) வீசி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது. இந்த 17 விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்சில் அஸ்வின் 8 ஓவரும், ஜடேஜா ஒரேயொரு ஓவரும் மட்டுமே வீசினார்கள்.



    2-வது இன்னிங்சில் ஜடேஜா ஒரு ஓவர் வீசினார். அஸ்வின் ஓவர்கள் வீசவில்லை. 110.1 ஓவரில் இருவரும் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாதது இதுவே முதல்முறையாகும்.

    இந்த மோசமான சாதனைக்கு சுழற்பந்து உள்ளாகியுள்ளது. இதேவேளையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    Next Story
    ×