search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவிஎஸ் லஷ்மண் கனவு அணியில் விராட் கோலி, அஸ்வினுக்கு இடம்
    X

    விவிஎஸ் லஷ்மண் கனவு அணியில் விராட் கோலி, அஸ்வினுக்கு இடம்

    விவிஎஸ் லஷ்மணின் கனவு அணியில் விராட் கோலி, அஸ்வின் இடம்பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டரில் ஜடேஜாவிற்கு இடம் கொடுக்கவில்லை.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்து வருகிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் லஷண்மன் ரிவியூ செய்து வருகிறார். அப்போது தற்போதைய நிலையில் உள்ள வீரர்களை கொண்டு தனது கனவு அணியை அறிவித்தார். அதில் விராட் கோலி மற்றும் அஸ்வினுக்கு இடம் கொடுத்துள்ளார்.



    அவர் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஜோ ரூட், ஹசிம் அம்லா, கேன் வில்லியம்சன், ஏபி டி வில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி ஆகியோரை பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளார். வங்காள தேசத்தின் சாஹிப் அல் ஹசனை ஆல்ரவுண்டராக தேர்வு செய்துள்ளார்.



    இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜாவிற்கு இடம் கொடுக்கவில்லை. பந்து வீச்சில் அஸ்வின், ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.



    லஷ்மண் கனவு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. ஹசிம் அம்லா, 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஜோ ரூட், 6. ஸ்டீவன் ஸ்மித், 7. டி வில்லியர்ஸ், 8. சாஹிப் அல் ஹசன், 9. அஸ்வின், 10. மிட்செல் ஸ்டார்க், 11. ஹசில்வுட்.
    Next Story
    ×