search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய மகளிர் அணி 2-வது பட்டம் வெல்லுமா?- சீனாவுடன் நாளை மோதல்
    X

    ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய மகளிர் அணி 2-வது பட்டம் வெல்லுமா?- சீனாவுடன் நாளை மோதல்

    நாளை நடக்க உள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணி சீனாவை வீழ்த்தி 2-வது ஆசிய கோப்பையை வெல்லுமா, என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    ககாமிகாஹரா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் ஆக்கிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரைஇறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஒரு அரை இறுதியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய அணியில் குர்ஜித் 2 கோல்களும் (7 மற்றும் 9-வது நிமிடம்), நவ்ஜோத் (10-வது நிமிடம்), லால்ரேஷ்மி (38-வது நிமிடம்) ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

    மற்றொரு அரை இறுதியில் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

    இதன் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.

    இந்திய மகளிர் ஆக்கி அணி சீனாவை வீழ்த்தி 2-வது ஆசிய கோப்பையை வெல்லுமா, என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி பட்டம் பெற்று இருந்தது.

    இந்திய மகளிர் அணி இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ‘லீக்‘ ஆட்டங்களில் சிங்கப்பூர் (10-0), சீனா (4-1), மலேசியா (2-0) அணிகளையும் கால் இறுதியில் கஜகஸ்தானையும் (7-1) வீழ்த்தி இருந்தது. சீனாவை ‘லீக்‘ ஆட்டத்தில் வென்று இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    சீனா மகளிர் ஆக்கி அணி ஆசிய கோப்பையை 2 முறை (1989, 2009) வென்று இருந்தது.

    முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான்- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×