search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
    X

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
    பிரிஸ்பேன்:

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீரர்களான பிராகாஷ் நஞ்சப்பா, உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அமன்பிரீத்சிங், ஜிதுராய் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    24 ஷாட்கள் கொண்ட இறுதிப்போட்டியில் 18-வது ஷாட் முடிவில் ஜிதுராய் 0.2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெளியேறினார். 20-வது ஷாட்டில் அமன்பிரீத்சிங் 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெளியேறினார். இறுதிசுற்றில் 222.4 புள்ளிகள் குவித்த பிரகாஷ் நஞ்சப்பா தங்கப்பதக்கம் வென்றார். அமன்பிரீத்சிங் வெள்ளிப்பதக்கமும், ஜிதுராய் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்த போட்டியில் 3 பதக்கத்தையும் இந்தியா முழுமையாக சொந்தமாக்கியது.

    ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் அங்குர் மிட்டல், இங்கிலாந்து வீரர் மேத்யூ பிரெஞ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பெண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டி தொடரில் இதுவரை இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி உள்பட 15 பதக்கங்களை வென்று இருக்கிறது.
    Next Story
    ×