search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாட்னா-அரியானா அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி
    X
    பாட்னா-அரியானா அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி

    புரோகபடி லீக்: இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? குஜராத்-பெங்கால் இன்று பலப்பரீட்சை

    மும்பையில் இன்று இரவு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    எலிமினேட்டர் ஆட்டங்களில் புனே அணி 40-38 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி. யோதாவையும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் 69-30 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் வீழ்த்தின. உ.பி., அரியானா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

    இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடும் என்பதால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. குஜராத் அணி ‘ஏ’ பிரிவில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டையுடன் 87 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    அந்த அணி ரெய்டு மற்றும் டேக்கிளில் சமபலத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் 11 வெற்றி, 5 தோல்வி, 6 டையுடன் 77 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இரு அணிகளும் மோதிய ‘லீக்’ ஆட்டம் 26-26 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் பாட்னாபை ரேட்ஸ்-புனேரி பல் தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    பாட்னா அணி அரியானாவுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இதனால் அதே உத்வேகத்துடன் ஆடுவார்கள். ‘லீக்’ ஆட்டத்தில் புனே அணி 47-42 என்ற கணக்கில் பாட்னாவை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
    Next Story
    ×