search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலியின் ஆக்ரோஷமே இந்தியாவின் பலமாக மாறியுள்ளது: சச்சின் தெண்டுல்கர்
    X

    கோலியின் ஆக்ரோஷமே இந்தியாவின் பலமாக மாறியுள்ளது: சச்சின் தெண்டுல்கர்

    கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமே இந்தியாவின் பலமாக மாறியுள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமே இந்தியாவின் பலமாக மாறியுள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார். இது கோலியின் 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இந்த போட்டியில் சதம் அடித்த கோலி, 192-வது இன்னிங்சில் 31-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார். சச்சின் தெண்டுல்கர் 49 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், விராட் கோலி 2008-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் கடும் ஆக்ரோஷ்த்துடன் விளையாடி வந்தார். ஆனால் மூத்த வீரர்கள் சிலர் கோலி ஆக்ரோஷ்த்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஆனால், அவர் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இன்று அவரது ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது.

    தற்போதைய இந்திய அணியில் சிறந்த ஸ்பின் பவுலர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றும் திறமை படைத்தவர்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×