search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: உ.பி.க்கு எதிராக ரெயில்வேஸ் த்ரில் வெற்றி; கேரளா, சவுராஷ்டிரா அணிகளும் வெற்றி
    X

    ரஞ்சி டிராபி: உ.பி.க்கு எதிராக ரெயில்வேஸ் த்ரில் வெற்றி; கேரளா, சவுராஷ்டிரா அணிகளும் வெற்றி

    ரஞ்சி டிராபி தொடக்க லீக்கில் உத்தர பிரதேச அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரெயில்வேஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
    ரஞ்சி டிராபி தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா - ஹரியானா அணிகள் ரோடக்கில் மோதின. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 278 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 107 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தொடரந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 140 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் சவுராஷ்டிரா இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜார்கண்டுக்கு ஏதிரான போட்டியில் கேரளா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜார்கண்டு முதல் இன்னிங்சில் 202 ரன்னும், 2-வது இன்னிங்சில் 89 ரன்களும் சேர்த்தன. கேரளா முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    உத்தர பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் ரெயில்வேஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 182 ரன்னும், உ.பி. 250 ரன்களும் சேர்த்தனர். 2-வது இன்னிங்சில் ரெயில்வேஸ் 161 ரன்கள் எடுத்தன. 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய உ.பி. 72 ரன்னில் சுருண்டது. இதனால் ரெயில்வேஸ் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×