search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி
    X

    லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி

    லா லிகா தொடரின் லீக் ஆட்டத்தில் பார்சிலோனா கிரோனா அணியையும், ரியல் மாட்ரிட் அணியையும் வீழ்த்தியுள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னணி அணியான பார்சிலோனா கிரோனா அணியை எதிர்த்து விளையாடியது.



    சொந்த மைதானத்தில் விளையாடிய கிரோனா அணியால் பார்சிலோனாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் முதல் கோலையும், 48-வது நிமிடத்தில் 2-வது கோலையும் பதிவு செய்த பார்சிலோனா, 69-வது நிமிடத்தில் 3-வது கோலை பதிவு செய்தது.



    கிரோனா அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.



    மற்றொரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி அலெவ்ஸ் அணியை 2-1 என வீழ்த்தியது. டோனி கேபலாஸ் இரண்டு கோல்களையும் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 6 போட்டியில் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×