search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: காயத்தால் மேத்யூஸ் இடம்பெறவில்லை
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: காயத்தால் மேத்யூஸ் இடம்பெறவில்லை

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை.
    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மேத்யூஸ். ஜிம்பாப்வேவிற்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணிலேயே இழந்ததால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய மேத்யூஸ் கடந்த ஒரு வருடமாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்த வருடம் ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். ஜூன் மாதம் வரை சர்வதேச போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை. மேலும் காயம் காரணமாக கடந்த வருடம் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு தொடரையும் புறக்கணித்தார்.



    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேத்யூஸ் பேட்டிங் மட்டுமே செய்தார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசினார்.

    பாகிஸ்தான் தொடரை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது மேத்யூஸ் காயத்தால் அவதிப்பட்டார். இந்த காயத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என இலங்கை அணி மானேஜர் அசாங்கா குருசிங்ஹா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×