search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: புனே அணி 8-வது வெற்றி
    X

    புரோ கபடி லீக்: புனே அணி 8-வது வெற்றி

    12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடரின் 84-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 37-25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.
    ராஞ்சி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 37-25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. புனே அணியில் சந்தீப் நார்வல் 9 புள்ளிகளும், ராஜேஷ் மோன்டல் 7 புள்ளிகளும் சேகரித்தனர். 11-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 8-வது வெற்றியாகும். அரியானா சந்தித்த 5-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 36-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.

    இன்றைய ஆட்டங்களில் மும்பை-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    Next Story
    ×