search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது
    X

    இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது

    இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
    கராச்சி:

    2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணியின் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

    அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செல்ல மறுப்பதால் பாகிஸ்தான் அணியின் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக வருகிற செப்டம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட சம்மதித்துள்ளது. இந்த ஆட்டங்கள் லாகூரில் பலத்த பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே மாதத்தில் இலங்கை அணி லாகூரில் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நவம்பர் மாத கடைசியில் பாகிஸ்தான் சென்று மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.



    அவர் மேலும் கூறுகையில், ‘உலக லெவன் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஹசிம் அம்லா, டுபிளிஸ்சிஸ், மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். எஞ்சிய வீரர்கள் ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. படிப்படியாக சர்வதேச போட்டிகள் பாகிஸ்தானில் அரங்கேறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். 
    Next Story
    ×