search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல் பைனல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
    X

    டி.என்.பி.எல் பைனல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் லீக் சுற்று, குவாலிபையர்-1, எலிமினேட்டர், குவாலிபையர்-2 சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் கவுசிக் கார்த்திக் களமிறங்கினர்.

    முந்தைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் இம்முறை, சதிஸ் பந்துவீச்சில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அபினவ் முகுந்த், கவுசிக் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சேப்பாக் அணி வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தூத்துக்குடி அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. இறுதிகட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் அணியில் சாய் கிஷோர் மற்றும் அருண் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
    Next Story
    ×