search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான் சதம், கோலி 82 நாட்அவுட்: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    தவான் சதம், கோலி 82 நாட்அவுட்: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 217 ரன்னை 28.5 ஓவரில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பகல்- இரவு ஆட்டமாக தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.2 ஓவரில் 216 ரன்கள் மட்டுமே எடுத்து அல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 3 விக்கெட்டும் பும்ப்ரா, சாஹல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தவான் அதிரடியாக விளையாட, ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். இருந்தாலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.



    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    8.1 ஓவரில் 50 ரன்னை தொட்ட இந்தியா, 14.3 ஓவரில் 100 ரன்னையும், 21.5 ஓவரில் 150 ரன்னையும், 26.3 ஓவரில் 200 ரன்னையும் தொட்டது.

    இதற்கிடையே 36 பந்தில் அரைசதம் அடித்த தவான், 71 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி 50 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 28.4 ஓவரில் 216 ரன்கள் இருக்கும்போது, 28.5-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    தவான் 90 பந்தில் 132 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 70 பந்தில் 82 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சதம் அடித்த தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பல்லேகலேயில் 24-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×