search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி அணி
    X

    புரோ கபடி 2017: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி அணி

    புரோ கபடி போட்டியின் 32-வது லீக் சுற்று ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியானது 30-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    அகமதாபாத்:

    புரோ கபடி போட்டியின் 32-வது லீக் சுற்று ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியானது 30-29 என்ற புள்ளிக்கணக்கில்  தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    புரோ கபடி லீக் போட்டிகள் மூன்றாம் கட்டமாக அகமதாபாத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (17-ம் தேதி) நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

    இது டெல்லி அணியின் 2-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 13 புள்ளிகளுடன் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    அதை தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இப்போட்டி 26-26 புள்ளிக் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன்மூலம் குஜராத் அணி 36 புள்ளிகளுடன் பீ பிரிவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

    இன்றுடன் அகமதாபாத்தில் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. அடுத்த கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



    Next Story
    ×