search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு, நிதான ஆட்டம்
    X

    இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு, நிதான ஆட்டம்

    இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திவருகின்றனர்.

    காலே;

    இலங்கைக்கு 6 வார கால பயணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இலங்கை அணி முதலில் வீச உள்ளது. இதற்கிடையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்திய அணியில் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக ஹர்திக்பாண்டியா களம் இறங்கியுள்ளார்.  அஷ்வின் தனது 50 -டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறார். இந்திய அணியின் பயிற்சியாளராக பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ரவி சாஸ்தி தேர்வு செய்யப்பட்டார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்திய அணி களம் இறங்கும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா,

    ஷிகர் தவான், அபினவ் முகுந்த், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்ட்யா, சகா, ரவிசந்திரன் அஷ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகம்மது சமி,

    இலங்கை, 

    திமுத் கருனரத்னே, உபுல் தரங்கா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, ஏஞ்சலே மேத்யூஸ், அசேலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், லஹிரு குமாரா, நுவன் பிரதீப்


    மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது. இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த் மற்றூம் சிகர் தவான் களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா, தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். இதுவரை 27 ஓவர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 64 ரன்களுடனும், புஜாரா 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×