search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளாக ப்ரமோஷன்
    X

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளாக ப்ரமோஷன்

    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
    லண்டன்:

    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய கூட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.சி.சி.யின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரித்து முடிவெடுக்கப்பட்டது.

    ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு மற்ற அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தது. நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு மேற்கண்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
    Next Story
    ×