search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் கோப்பையில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாளுவேன்: அஸ்வின்
    X

    சாம்பியன்ஸ் கோப்பையில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாளுவேன்: அஸ்வின்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாள போகிறேன் என சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரசன் அஸ்வின் தெரிவித்தார்.
    மும்பை:

    மினி உலககோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

    முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது:-



    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாள போகிறேன். அதை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் சோதித்து பார்க்க திட்டமிட்டு இருக்கிறேன்.

    இது போட்டி தொடரில் சிறப்பாக விளையாட உதவும். எனது புதிய யுக்திகள் அணியின் வெற்றிக்கு நிச்சயம் பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

    ஒருநாள் போட்டியில் ஐ.சி.சி. புதிய விதிகளை கொண்டு வந்து உள்ளதால் பந்துவீச்சில் பழைய யுக்திகளுடன் செயல்படுவது பலன் அளிக்காது. அதற்கு ஏற்றாற்போல் புதிய யுக்திகளை புகுத்த முடிவு செய்து உள்ளேன்.

    ஐ.பி.எல். தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். இதன்மூலம் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் கண்டறியப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×