search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் - பொதுமக்கள் பீதி
    X

    காஷ்மீர்: ஜம்மு மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் - பொதுமக்கள் பீதி

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில் ராணுவ வீரர்கள் மற்றும்  எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர். இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது. 

    கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 3 பேர், 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு ராணுவ வீரர் என 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  பாகிஸ்தான் ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்துடனேயே எல்லையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இன்றைய தாக்குதல் இருட்டிய பின்னரும் தொடர்வதால் ஜம்மு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ஜம்மு பகுதி முழுவதும் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேவையான குடிநீர், உணவு பொருட்கள் மற்றும் பாதுகாப்பான பதுங்குமிடங்கள் ஆகியவற்றை தயார்படுத்தி கொள்ளுமாறும், தங்கள் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையினர், போலீஸ் படையினர் தொடர்பான தகவல்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #tamilnews 
    Next Story
    ×