search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த ஆதிரா.
    X
    தற்கொலை செய்த ஆதிரா.

    மாணவி தற்கொலை எதிரொலி: ‘ரேக்கிங்’செய்த சக மாணவிகள் 5 பேர் அதிரடி கைது

    கேரள மாணவி தற்கொலை எதிரொலியாக ‘ரேக்கிங்’செய்த சக மாணவிகள் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தை சேர்ந்தவர் ஆதிரா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஆதிரா கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஆதிராவுடன் படிக்கும் மாணவிகள் மற்றொரு ஆதிரா (19), சைஜா (19), வைஷ்ணவி (19), சாலு (19), எலிசபெத் (19) ஆகிய 5 மாணவிகள் ஆதிராவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்தனர். மேலும் அவரது ஜாதி பெயரை கூறியும் திட்டினர்.

    இதனால் மனவேதனை அடைந்த ஆதிரா இது குறித்து கல்லூரி முதல்வர் தீபாமணிகண்டனிடம் புகார் செய்தார். ஆனால் அவர் மாணவிக்கு ஆதரவு தராமல் ரேக்கிங் செய்த மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த ஆதிரா சம்பவத்தன்று கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து மலப்புரம் டி.எஸ்.பி. ஜலில் வழக்குப்பதிவு செய்து ரேக்கிங் செய்த 5 மாணவிகளையும் கைது செய்தார். கல்லூரி முதல்வர் தலைமறைவானார். போலீசார் அவரை நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேடினர்.

    இந்நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கோவையில் கல்லூரி முதல்வர் தீபா மணிகண்டன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கோவை வந்த கேரள போலீசார் கல்லூர் முதல்வர் தீபாமணி கண்டனை கைது செய்தனர்.


    Next Story
    ×