search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியைக்கு கட்டித்தழுவி ஆறுதல் கூறிய ராகுல்காந்தி
    X

    பேராசிரியைக்கு கட்டித்தழுவி ஆறுதல் கூறிய ராகுல்காந்தி

    ஆமதாபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது குறைகளை கூறி அழுத பேராசிரியைக்கு ராகுல்காந்தி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.
    ஆமதாபாத்:

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    கூலித்தொழிலாளி முதல் உயர்பதவி வகிப்போர் வரை பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டுஅவற்றை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    நேற்று ஆமதாபாத்தில் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பேராசிரியர்களும், ஆசிரியர்களும், ஓய்வு பெற்றவர்களும் கலந்து கொண்டு குறைகளையும், தங்களது கோரிக்கைகளையும் ஒவ்வொருவராக வந்து எடுத்து கூறினார்கள்.

    அப்போது ரஞ்சனா அவஸ்தி என்ற பெண் பேராசிரியை தனது குறைகளை எடுத்துக் கூறினார். பி.எச்.டி. டாக்டர் பெற்ற தான் பகுதி நேர பேராசிரியையாக வேலை பார்ப்பதாகவும், ஓய்வு பெறும் தருணத்தில் இருக்கும் தனக்கு போதிய ஊதியம் மற்றும் உரிமைகள் பலன்கள் மறுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதை தீர்த்து வைக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    அவர் மேலும் கூறுகையில், “22 ஆண்டுகளாக பணியில் இருக்கும் தனக்கு மாதம் ரூ.12,000 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. பெண்கள் பிரசவ கால விடுப்பு மறுக்கப்படுகிறது.

    பணிக் காலம், எங்களுக்கு மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. எனவே ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் மரியாதையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார்.

    அதை கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ராகுல்காந்தி திடீர் என்று மைக்கை கீழே வைத்துவிட்டு பேராசிரியை அவஸ்தியை நோக்கிச் சென்றார். யாரும் எதிர்பாராத வகையில் அவரை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இந்த காட்சி அரங்கில் இருந்த அனைவரது நெஞ்சைத் தொடுவதாக இருந்தது. கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
    Next Story
    ×