search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாயின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
    X

    இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாயின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

    இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாய் ராவத்தின் 153-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்குரியர், ருக்மாபாய் ராவத். இவர் 1864-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பிறந்தார். ருக்மாபாயின் தந்தை அவரது 9-வது வயதில் மரணமடைந்தார். தந்தை மரணத்திற்கு பின் அவரது தாய் வேறொருவரை மணந்துகொண்டார். அதன்பின் 11 வயதில் அவருக்கு திருமணமானது. இருப்பினும் அவர் தனது கணவருடன் வாழாமல் வளர்ப்பு தந்தையின் அறவணைப்பில் இருந்தபடி கல்வி பயின்று வந்தார்.

    1885-ம் ஆண்டு விவாகரத்து வேண்டி நீதிமன்றம் சென்றார். இதற்கு இந்தியாவில் வாழும் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 1887-ம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தது. கணவருடன் வாழவேண்டும், இல்லையேல் 6 மாதகாலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ருக்மாபாய் கல்வியின் மீது உள்ள ஆர்வத்தால் சிறை சென்றார். இதுகுறித்து இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். இதையடுத்து அவரது சிறை தண்டனையை இங்கிலாந்து ராணி ரத்து செய்தார்.

    அதன்பின் அவருக்கு 2000 ரூபாய் அபராதத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு குழந்தைகள் திருமணத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டுவந்தது.

    லண்டன் மகளிர் மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பு படித்தார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் சூரத் நகருக்கு திரும்பிய அவர், ராஜ்கோட்டில் உள்ள மகளிர் மருத்துவமனையில் சுமார் 35 ஆண்டுகள் டாக்டராக பணியாற்றினார். அவர் பிகாஜி என்னும் டாக்டரை மருமணம் செய்து கொண்டார். மேலும் இந்திய சுதந்திரத்திற்காகவும், பெண்கள் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்த அவர் 1955-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி 91 வயதில் இயற்கை எய்தினார்.

    இந்தியாவின் முதல் பெண் டாக்டரான ருக்மாபாய் ராவத்தின் 153-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.
    Next Story
    ×