search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி 24-ந்தேதி முதல் மீண்டும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம்
    X

    ராகுல் காந்தி 24-ந்தேதி முதல் மீண்டும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம்

    குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி 5-வது கட்டமாக ராகுல் காந்தி வருகிற 24-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்க உள்ளார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.

    முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து குஜராத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி விரைவில் அங்கு சென்று 5 பிரமாண்ட பொது கூட்டங்களில் பேச உள்ளார்.

    அதற்கு பதிலடியாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் குஜராத்தில் 4 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். இந்த பிரசாரங்களின் போது அவர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் பணமதிப்பு இழப்பு ஆகியவற்றின் பாதிப்புகள் பற்றி குறிப்பிட்டு ஆதரவு திரட்டினார்.

    5-வது கட்டமாக ராகுல் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக் கிழமை) குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். பிரமாண்ட பொது கூட்டத்தில் பேச உள்ள அவர் புகழ்பெற்ற சோமநாத் ஆலயத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    இதுவரை முந்தைய பிரசாரங்களில் 12 இந்து கோவில்களுக்கு ராகுல் சென்று வழிபாடுகள் செய்துவிட்டு பிரசாரத்தை மேற்கொண்டார்.

    குஜராத்தில் தொடர்ந்து அவர் இந்து ஆலயங்களுக்கு செல்வது பா.ஜனதா கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×