search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம் - புதிய செயலியை வெளியிட்ட என்.ஐ.எம்.எஸ் மருத்துவமனை
    X

    நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம் - புதிய செயலியை வெளியிட்ட என்.ஐ.எம்.எஸ் மருத்துவமனை

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகள் தங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்ய புதிய செயலியை வெளியிட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (என்.ஐ.எம்.எஸ்.) டிஜிட்டல் மயமானது. நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய செயலியை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் நோயாளிகள் தங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதனால் நோயாளிகள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்.



    இந்த செயலி மூலம் நோயாளிகள் தங்கள் மருத்துவ அறிக்கையை பார்க்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். இது அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இது குறித்து என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மானோகர் கூறுகையில், 'இந்த திட்டமானது 2014 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் நோயளிகளின் அறிக்கையை ஆன்லைனில் சேமித்து வைக்கலாம். இது மருத்துவருக்கான வேலையை பாதியாக குறைக்கிறது. இந்த செயலியின் அடுத்த நிலைதான் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இது நோயாளிக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த திட்டத்திற்கு நம் சுகாதார மற்றும் குடும்ப நல துறையின் மந்திரி மற்றும் அதன் செயலாளர் உதவி செய்தனர். அவர்களின் உதவியால் தான் பல பிரச்சனைகளை தாண்டி ஏப்ரல் மாதம் செயலியின் அடிப்படை மாடல் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த செயலி ஜீலை மாதம் வெளியிடப்பட்டது . இதனால் நோயாளிகள் பெரிதும் பயன் அடைவர்' என அவர் கூறினார்.
    Next Story
    ×