search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு: அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
    X

    டெல்லியில் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு: அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

    டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஒற்றை, இரட்டைப் படை எண்கள் கொண்ட வாகனங்களை இயக்கும் நாட்களில் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.

    2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×