search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க மலேசியாவிடம் கோரிக்கை விடுக்கப்படும்: வெளியுறவு துறை
    X

    ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க மலேசியாவிடம் கோரிக்கை விடுக்கப்படும்: வெளியுறவு துறை

    மதபோதகர் ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

    இதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்பட்ட ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

    சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  

    இந்தியாவில் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள ஜாகீர் நாயக் மலேசியாவில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, “ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முடியும் நிலையில் உள்ளது. இது முடிந்ததும் விரைவில் மலேசிய நாட்டு அரசுக்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை முன்வைப்போம். கோரிக்கை என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாக தெரியும்,” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×