search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆண்டுகளில் செய்யாத முன்னேற்றத்தை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்யும்: நிதின் கட்காரி
    X

    50 ஆண்டுகளில் செய்யாத முன்னேற்றத்தை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்யும்: நிதின் கட்காரி

    50 ஆண்டுகளில் செய்யாத முன்னேற்றத்தை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்யும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
    சிம்லா:

    68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2012-ம் ஆண்டு இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 26 இடங்கள் கிடைத்தது.

    இந்நிலையில், இங்கு நவம்பர் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இமாசலபிரதேச பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் பிரேம் குமார் தூமல் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் இமாச்சலபிரதேசம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:

    ஜவகர்லால் நேரு குடும்பத்தினர் ஆட்சி காலத்தில் ஊழல், வறுமை ஒழிப்பதற்கான முயற்சியில் தோல்வி அடைந்து விட்டது.  நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வரிசையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வறுமை கோஷத்தை பற்றி மீண்டும் கூறிவருகிறார்.

    அவர்கள் வறுமையை ஒழிப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாட்டு மக்களின் வறுமையை அல்ல காங்கிரஸ் தலைவர்களின் வறுமையை ஒழிப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    சட்டசபை தேர்தல் பா.ஜ.க.விற்கும் காங்கிரஸ்க்கும் இடையே அல்ல. ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எதிர்காலத்திற்கான தேர்தல்.

    காங்கிரஸ் தலைவர்கள் மாநிலம் மட்டும் நாட்டுமக்களுக்காக இல்லாமல் தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்கள்.

    பா.ஜ.க. அரசு இமாச்சலபிரதேசத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறது. சுற்றுலா துறையை ஊக்குவிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் பெரிதும் முதலீடு செய்வோம்.

    பா.ஜ.க.விற்கு மக்கள் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் ஆடம்பரமான வீடுகளில் குழந்தைகளுடன் ஓய்வு பெறுவதும் நேரத்தை செலவிட வேண்டும். பார்வை இல்லாத, ஊழல் நிறைந்த அரசாங்கத்தை சுமக்க வேண்டாம்.  நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    50 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றத்தை 5 ஆண்டுகளில் பாஜக அரசு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×