search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் நிதிஷின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது: லாலு பிரசாத்
    X

    பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் நிதிஷின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது: லாலு பிரசாத்

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஸ்ரீ கிருஷ்ணா சிங்கின் 130-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்து செயல்படும். பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வின் ஆணைப்படியே சி.பி.ஐ., வருமான வரி மற்றும் அமலாக்க துறையினர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவன வருமானம் அதிகரித்துள்ளது குறித்து இந்த அமைப்புகள் வாய் திறந்து எந்த கேள்வியும் கேட்பது இல்லையே? பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×