search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடியில் புதிய விமான நிலையம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
    X

    சீரடியில் புதிய விமான நிலையம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்

    மராட்டிய மாநிலம் சீரடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
    சீரடி:

    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமிதி தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாட உள்ளது. நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக சீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது:

    இந்தாண்டு சாய்பாபா சமாதி அடைந்ததன் நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ளது. தினமும் இங்கு 60,000க்கு மேற்பட்ட பகதர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக சீரடியின் அகமது நகரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மும்பையில் இருந்து சுமார் 238 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் ரூ.350 கோடி செலவில் கட்ட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு சீரடி சாய்பாபா அறக்கட்டளை 50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மொத்த 2,750 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 300 பயணிகள் வந்து செல்லலாம். மும்பையில் இருந்து சாலை வழியாக 5 மணி நேரம் பயணத்தில் சீரடியை அடையலாம். ஆனால் இப்போது விமானம் மூலம் 40 நிமிடங்களில் சீரடியை வந்தடையலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×