search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
    X

    5 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

    சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தின்போது ரூ.16320 கோடி மதிப்பில் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் ரூ.500 செலுத்தி மின் இணைப்பு பெறலாம்.

    மேலும் சவுபக்கியா யோஜனா என்ற புதிய திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் மின்சாரம், மண்எண்ணெய் மானியம், கல்வி, சுகாதாரம், பொது பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு, அரசு வழங்கும் இதர சலுகைகளுடன் 5 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    Next Story
    ×