search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா?: புரிந்துகொள்ள கடினமாக உள்ளது என்கிறார் பவார்
    X

    சிவசேனா ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா?: புரிந்துகொள்ள கடினமாக உள்ளது என்கிறார் பவார்

    பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் உண்மையான நிலை என்ன என்பதை தெளிவாக விளக்க வேண்டும் என்று சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
    சிவசேனா கட்சி பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசியலிலும் அங்கம் வகித்து வருகிறது. ஆனால், பா.ஜனதா ஆட்சியின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களது அரசியல் பத்திரிகையான சாம்னாவில் கடுமையான வகையில் தலையங்கம் எழுதி வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா உடனான தொடர்பு குறித்து உண்மையான நிலையை விளக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.



    இதுகுறித்து ஷரத் பவார் கூறுகையில் ‘‘சிவசேனா மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது. சிவசேனா கட்சி விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையிலான செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருவது பாராட்டுவதற்குறியது.

    அதேவேளையில் அந்த கட்சி தனது கொள்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். சிவசேனா கட்சி ஆளுங்கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து புரிந்து கொள்ள கடினமாக உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×