search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலனுக்கு வாட்ஸ்-அப்பில் நிர்வாண படத்தை அனுப்பியதால் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சிக்கல்
    X

    காதலனுக்கு வாட்ஸ்-அப்பில் நிர்வாண படத்தை அனுப்பியதால் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சிக்கல்

    காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
    பெங்களூரு:

    காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.

    பெங்களூருவில் வசித்துவரும் 20 வயது பல் மருத்துவ மாணவி 2015-ம் ஆண்டு ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் வாட்ஸ்-அப்பில் அரட்டை அடித்து வந்தனர். அப்போது, நிர்வாண படத்தை அனுப்பும்படி மாணவியிடம் காதலன் கேட்டதால் அவர் மீதான நம்பிக்கையில் தனது நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்.

    ஆனால் காதலனோ அந்த படத்தை தனது நண்பருக்கு அனுப்பினார். அந்த நபர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையென்றால் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த அந்தநபர், மாணவியின் நிர்வாண படத்தை தனது நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்தார். அதை அவருடைய நண்பர்கள் பலரும் ரசித்ததுடன், மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்தனர்.

    இந்த சமயத்தில், அந்த வாட்ஸ்-அப் குழுவில் இருந்த 30 வயது தொழில் அதிபர் ஒருவர் மாணவியிடம் தொடர்புகொண்டு, ‘குழு உறுப்பினர்களிடம் உள்ள நிர்வாண படத்தை அழிக்க உதவி செய்கிறேன்’ என்று கூறினார். அதன்பின்னர் மாணவியும், தொழில் அதிபரும் தொடர்ந்து இணக்கமாக பேசிவந்தனர்.

    ஒரு கட்டத்தில் மாணவியிடம் தொழில் அதிபர் தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த காதலை மாணவியும் ஏற்றுக்கொண்டதால், இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு மாணவி வீட்டை விட்டு வெளியேறி தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பின்னரும் மாணவி தனது படிப்பை தொடர்ந்தார்.

    ஆரம்பத்தில் நன்றாக இருந்த தொழில் அதிபர், சில மாதங்களாக மாணவிக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லை கொடுக்க தொடங்கினார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மனதளவிலும் துன்புறுத்தி வந்தார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள நிர்வாண படத்தை இணையதளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் விரக்தியடைந்த மாணவி சமீபத்தில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க மாணவியும், அவருடைய பெற்றோரும் விரும்பவில்லை. ஆனால், தங்களது மகளின் கணவருக்கு அறிவுரை கூறி சேர்த்துவைக்க வேண்டும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் ‘வனிதா சகாயவாணி’ ஆலோசனை மையத்தில் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.

    அவர்கள் மாணவி மற்றும் அவருடைய கணவரை அழைத்து ஆலோசனை வழங்கினர். பல்வேறு கட்டங்களாக நடந்த ஆலோசனையின்போது, முதலில் கணவருடன் செல்ல விரும்பிய மாணவி, பின்னர் கணவருடன் செல்ல மறுத்து விவாகரத்து பெற்றுத்தரும்படி கேட்டார்.

    அவரது கணவரோ, மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறி மிரட்டினார். ஆலோசனை மையத்திலேயே ஒருமுறை அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் இந்த பிரச்சினை இடியாப்ப சிக்கலாக மாறி ஆலோசனை வழங்குபவர்களையே கலங்க வைத்துள்ளது. தொடர்ந்து இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு தவறான செயலால் இளம்பெண் அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி திணறி வருவதை இவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
    Next Story
    ×