search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடி தள்ளுபடி
    X

    ராஜஸ்தானில் விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடி தள்ளுபடி

    உத்தரபிரதேசம், மராட்டியத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மந்திரி பிரபுலால் தெரிவித்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மராட்டியத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

    உத்தரபிரதேசத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கும், மராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடிக்கும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்-மந்திரிகளான யோகி ஆதித்ய நாத், தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டு இருந்தனர்.

    உத்தரபிரதேசம் மராட்டியத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கும் வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ரூ.50 ஆயிரம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில வேளாண் மந்திரி பிரபுலால் தெரிவித்துள்ளார்.

    விவசாய பயிர் கடன்களை தள்ளபடி செய்யக்கோரி அம்மாநில விவசாயிகள் கடந்த 1-ந் தேதிமுதல் போராட்டத்தில் குதித்தனர்.

    14 மாவட்டங்களில் போராட்டம் தீவிரமானது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    Next Story
    ×