search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கடன் தள்ளுபடி"

    ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி செலவை அரசு ஏற்றது. #Rajasthangovt #farmloanwaiver
    ஜெய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல் மந்திரியாக  பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

    அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற  பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். 

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அசோக் கெலாட் தலைமையிலான அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajasthangovt #farmloanwaiver 
    ×