search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓணம் பண்டிகையொட்டி கேரளாவில் மது விற்பனை அமோகம் - 10 நாட்களில் 484 கோடி ரூபாய் வசூல்
    X

    ஓணம் பண்டிகையொட்டி கேரளாவில் மது விற்பனை அமோகம் - 10 நாட்களில் 484 கோடி ரூபாய் வசூல்

    ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. 10 நாட்கள் பண்டிகையில் சுமார் 484 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது ஓணம் பண்டிகையாகும். பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை ‘ஓணம் பண்டிகை’யாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையை அறுவடை திருநாள் என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். 

    ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லப்படும் தூய்மையான வெண்மை நிற ஆடைகளை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பல வகை பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 

    இந்நிலையில், கடந்த மாதத்தில் இந்த ஓணம் திருவிழா தொடங்கியது. பண்டிகையின் கடைசி நாள் கடந்த திங்கள்கிழமை (4-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா காலத்தில் கேரளா மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது என கேரள மாநில மதுபானங்கள் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது.

    திருவிழாவின் பத்து நாட்களில் மாநிலத்தில் இயங்கிவரும் மதுக்கடைகளில் சுமார் 484 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வசூலான 450 கோடி ரூபாயை விட அதிகமாகும். அதிகபட்சமாக ஞாயிறு அன்று 71 கோடி ரூபாய்க்கும், திருவோண தினமான திங்களன்று 43.12 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×