search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. சட்ட மேல்சபை இடைத்தேர்தல்: யோகி ஆதித்யாநாத் வேட்பு மனு தாக்கல் செய்தார்
    X

    உ.பி. சட்ட மேல்சபை இடைத்தேர்தல்: யோகி ஆதித்யாநாத் வேட்பு மனு தாக்கல் செய்தார்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்ட மேல்சபை இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி ஆதித்யாநாத் மற்றும் மேலும் நான்கு மந்திரிகள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி அம்மாநில முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றது.

    இதற்கிடையில், அம்மாநில சட்ட மேல்சபையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த புக்கல் நவாப், யஷ்வந்த், சரோஜினி அகர்வால், அஷோக் பாஜ்பய் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மேல்சபை உறுப்பினர் தாக்கூர் ஜைவீர் சிங் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்ததால் அவரது பதவி பறிபோனது.

    இதையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள ஐந்து இருக்கைகளுக்கான இடைத்தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.

    இவர்கள் மூன்று பேரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லாத நிலையில் இவர்கள் ஆறு மாதங்களுக்குள் முறைப்படி சட்டசபை அல்லது சட்ட மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    இதேபோல் யோகி ஆதித்யாநாத் தலமையிலான மந்திரிசபையில் அங்கம் வகிக்கும் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லை.



    இந்நிலையில், வரும் 15-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகள் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தற்போது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×