search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பள்ளியில் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து ஆசிரியர் கைது
    X

    டெல்லி பள்ளியில் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து ஆசிரியர் கைது

    டெல்லி பள்ளியில் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இங்கிலாந்து ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் முர்ரே டெனிஸ் வார்டு. இவர் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு நன்கொடைகள் வழங்கி வந்தார்.

    அவர் டெல்லி வந்து ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு தனது விருப்பத்தின் பேரில் ஆங்கிலப்பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில்தான் பாடம் சொல்லிக் கொடுத்த 3 மாணவர்களுக்கு முர்ரே டெனிஸ்வார்டு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் பாடம் நடத்தும் வகுப்புக்கு செல்ல மாணவர்கள் பயந்தனர்.

    சம்பவத்தன்று அவரது வகுப்பு அறைக்கு பள்ளி நிர்வாகிகள் சென்றபோது 3 மாணவர்கள் அழுது கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ஆசிரியர் வார்டு தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தனர்.

    மாணவர்கள் அனைவரும் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள். பாடம் சொல்லிக் கொடுத்து முடிந்ததும் அவர்களை தனித்தனியாக வரச்சொல்லி இவ்வாறு தொல்லை கொடுத்து இருக்கிறார். மாணவர்களை இது பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதும் தெரிய வந்தது.

    இதுபற்றி பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே ஆர்.கே.புரம் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்து கொண்டனர். அதன்பேரில் போலீசார் ஆசிரியர் வார்டு மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் வசந்த்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் வார்டு தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரது அறையில் இருந்த செல்போன், லேப்-டாப், வீடியோ கேசட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    அதில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை அவரே எடுத்தாரா? அல்லது வேறு யாராவது அனுப்பியதா என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறும்போது, நாங்கள் பொதுவாக நன்கொடையாளர்களை பள்ளியின் அலுவலகத்துக்குள்ளோ, கேண்டினுக்குள்ளோ அனுமதிப்பதில்லை. ஆனால் வார்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர விரும்பியதால் அனுமதித்தோம் என்று விளக்கம் அளித்தனர்.
    Next Story
    ×