search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் கட்சியை பலப்படுத்த தீவிரம்: பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
    X

    ராஜஸ்தானில் கட்சியை பலப்படுத்த தீவிரம்: பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

    ராஜஸ்தான் மாநிலம் வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தொடரந்து மூன்றாம் நாளான இன்று அம்மாநிலத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது சம்மந்தமாக கட்சி தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் வந்துள்ளார்.

    மூன்றாம் நாளான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மாநில பா.ஜ.க. தலைவர் அஷோக் பர்னாமி மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த மூத்த கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இன்று மாலையில் கட்சி மையக்குழு உறுப்பினர்களையும், கட்சியின் முழு நேர உறுப்பினர்களையும் சந்தித்து மாநிலத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
    Next Story
    ×