search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழிப்பு வழக்கில் கைதானவர் போலீஸ் காவலில் படுகொலை
    X

    கற்பழிப்பு வழக்கில் கைதானவர் போலீஸ் காவலில் படுகொலை

    இமாசலப்பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் சககைதியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
    சிம்லா:

    இமாசலப்பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கை பகுதியில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி நடந்த பெண் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் நேபாளத்தை சேர்ந்த சுராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கோட்கை போலீஸ் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சூரஜிற்கும் அவருடன் கைது செய்யப்பட்ட ராஜேந்தர் என்ற ராஜீவிற்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.  வாக்குவாதம் முற்றியதில் ராஜீவ், சூரஜின் தலையை பிடித்து சுவற்றில் வேகமாக தள்ளினான். இதில் சுவற்றில் மோதி படுகாயமடைந்த சூரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து போலீஸ் கூறுகையில், பத்தாம் வகுப்பு மாணவி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் ராஜீவ் தான் முக்கிய குற்றாவாளி என்று சூரஜ் கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தில் ராஜீவ், சூரஜை தள்ளி விட்டுள்ளான். இதில் சூரஜ் தலை சுவற்றில் மோதியதில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இந்த லாக்கப் கொலையையடுத்து கோட்கை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த கற்பழிப்பு வழக்கில் மக்கள் நீதி கேட்டு போராடிவரும் நிலையில், இந்த கொலையால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க கோட்கை பகுதியில் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×