search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கம்
    X

    சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கம்

    சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் தேசிய புலனாய்வு முகமையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் தேசிய புலனாய்வு முகமையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், கடந்த ஆண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தாக தகவல்கள் வெளியாகின. இவ்விவகாரம் பரவலாக விமர்சனங்களை எழுப்பின. மேலும், ஜாகீர் நாயக்கின் கருத்துகளால் கவரப்பட்டதாக வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய சில தீவிரவாதிகள் சிலர் கூறியிருந்ததாக வெளியான தகவல்களும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

    இதனிடையே, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாக கூறப்பட்ட சில வழக்குகளை ஜாகீர் நாயக்குக்கு எதிராக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பதிவு செய்தது. மேலும், அவருக்கு எதிராக பிடி ஆணையும் பிறப்பித்தது.  ஜாகீர் நாயக், தற்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவரிடம் என்.ஐ.ஏ அறிவுறுத்தியது. வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் ஜாகீர் நாயக், அவற்றுக்கு உடன்படாததால் சர்வதேச போலீஸ் உதவியை என்.ஐ.ஏ நாடியது.

    இந்நிலையில், அவர் வேறு நாடுகளுக்குத் தப்பி செல்ல இயலாத வகையில் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, மும்பையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவரது பாஸ்போர்ட்டை நேற்று முடக்கியது.

    தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் உரிய விளக்கமளிக்காததைத் தொடர்ந்தே பாஸ்போர்ட்டை முடக்க முடிவு செய்யப்பட்டதாகத் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×