search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள மாநில அரசின் திட்டத்துக்கு ஐ.நா.விருது: மம்தாவுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
    X

    மேற்கு வங்காள மாநில அரசின் திட்டத்துக்கு ஐ.நா.விருது: மம்தாவுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

    மேற்கு வங்காள மாநில அரசுக்கு இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ’பொதுச் சேவை விருது’ கிடைத்தமைக்காக அம்மாநில முதல் மந்திரி மம்தாவுக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கும் அரசு நிர்வாகத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்

    அவ்வகையில், சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள வளர்இளம் பெண்களுக்கான நேரடி அரசு நிதி பரிமாற்றத்துக்கு வகை செய்யும் ’கன்னியாஸ்ரீ பிரகல்பா’ என்ற நலத்திடத்தை சிறப்பாக செயல்படுத்திய மேற்கு வங்காளம் மாநில அரசின் மகளிர்- குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் இந்த ஆண்டின் ’பொதுச் சேவை விருது’-க்கு தேர்வாகியுள்ளது.

    இந்தியாவின் சார்பில் இவ்விருதுக்கு இந்த ஆண்டு தேர்வாகியுள்ள ஒரே மாநிலம் மேற்கு வங்காளம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ள மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ’இந்த நல்ல பணிக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலம் தவிர அர்ஜன்டினா, அர்மேனியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, ஈக்குவேடர், மங்கோலியா, பிரிட்டன், போட்ஸ்வானா, பிரான்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய பத்து நாடுகளை சேர்ந்த 11 அமைப்புகள் இந்த சிறப்புக்குரிய விருதுக்கு தேர்வாகியுள்ளன.
    Next Story
    ×