search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாய பாடமாக்க மசோதா - அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம்
    X

    பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாய பாடமாக்க மசோதா - அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம்

    நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதா மீது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த ஜனாதிபதி சிபாரிசு செய்து இருப்பதாக பாராளுமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த ஜனாதிபதி சிபாரிசு செய்து இருப்பதாக பாராளுமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



    இந்த மசோதாவில், ‘பகவத் கீதையின் நேர்மையான சிந்தனைகளும், போதனைகளும் இளைய தலைமுறையை சிறந்த குடிமக்களாக ஆக்கும். எல்லா வயதினருக்கும் பொருத்தமான இதை கல்வி நிறுவனங்கள் புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, நீதி போதனை கல்வியாக கீதையை கற்பிக்க வேண்டும். இதை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதே சமயத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×