search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி பிரதமரானது நம்முடைய அதிர்ஷ்டம் - நடிகை பிரீத்தி ஜிந்தா
    X

    மோடி பிரதமரானது நம்முடைய அதிர்ஷ்டம் - நடிகை பிரீத்தி ஜிந்தா

    வி.ஐ.பி.களின் காரில் அமைந்திருக்கும் சிவப்பு சுழல் விளக்குகளை அகற்ற அனைவரும் முன்வரவேண்டும் என பிரதமர் மோடி விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள நடிகை பிரீத்தி ஜிந்தா, மோடி பிரதமரானது மக்களின் அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    நாட்டில் இருக்கும் அனைத்து வி.ஐ.பி.களும் தங்களது கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றி அக்கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, பல மாநிலங்களின் முதல்வர்கள் தங்களது கார்களில் உள்ள சுழல் விளக்குகளை அகற்றினர்.

    மேலும், இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி ,”நமது நாட்டில் முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) என்ற விரும்பத்தகாத சூழல் உருவாகியுள்ளது. இந்த கலாசாரம் நமது மனங்களில் இருந்து வெளியேறினால் நல்லது. எனவே தான் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் சில முக்கிய பிரமுகர்களின் மனதில் இருந்து தான் ஒரு வி.ஐ.பி. என்ற எண்ணம் அகற்றப்பட்டிருக்கும் என உறுதியாக நம்பலாம். புது இந்தியாவில் வி.ஐ.பி. மட்டும் முக்கியமானவரல்ல. அனைவரும் முக்கியமானவர்களே.” எனக் கூறியிருந்தார்.

    மோடியின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா ,” அனைத்து குடிமக்களையும் வி.ஐ.பி.களாக கருதும் மோடி, பிரதமராக பொறுப்பேற்றது நம்முடைய அதிர்ஷ்டம். நாட்டை முன்னேற்றதான் அனைத்து தலைவர்களும் பாடுபடுவர். ஆனால், ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.” என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.

    மோடி கொண்டுவந்த தூய்மை இந்தியா போன்ற திட்டங்களையும் அவர் வரவேற்று புகழ்ந்து பேசியுள்ளார்.
    Next Story
    ×