search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவிகளை மாற்றுவதற்கு பயன்படும் ‘முத்தலாக்’ ஆயுதம்: உ.பி. மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    மனைவிகளை மாற்றுவதற்கு பயன்படும் ‘முத்தலாக்’ ஆயுதம்: உ.பி. மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

    இஸ்லாமியர்களின் தலாக் முறை அடிக்கடி மனைவிகளை மாற்றுவதற்கும், பழைய மனைவி மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளும் ஆயுதமாகவும் ‘முத்தலாக்’ முறை பயன்பட்டு வருவதாக உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாக இருப்பவர் சுவாமி பிரசாத் மவுரியா. இங்குள்ள பஸ்தி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மவுரியா, நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிவரும் ‘முத்தலாக்’ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

    பழைய மனைவிகளை கழற்றிவிட்டு, புதிய மனைவியர் மூலம் தங்களது காமம்சார்ந்த அபிலாஷைகளை தீர்த்து கொள்ளவும், பழைய மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தைகளை தெருவில் பிச்சை எடுக்க வைக்கவும் ‘முத்தலாக்’ என்னும் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் பழக்கத்தை முஸ்லிம் ஆண்கள் கடைபிடித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த முத்தலாக் முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட மவுரியா, உரிய காரணம் இல்லாமலும் அநீதியான முறையிலும் இத்தகைய முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிவரும் பெண்களுக்கு பா.ஜ.க. பக்கதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×