search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழிப்பு வழக்கு: உ.பி. முன்னாள் அமைச்சரின் ஜாமீனுக்கு தடை விதித்தது ஐகோர்ட்
    X

    கற்பழிப்பு வழக்கு: உ.பி. முன்னாள் அமைச்சரின் ஜாமீனுக்கு தடை விதித்தது ஐகோர்ட்

    கற்பழிப்பு வழக்கில் உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு உள்ளூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவர் காய்த்ரி பிரஜாபதி. இவர் மீது இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர் கடந்த மாதம் 15-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கற்பழிப்பு வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறிய காயத்ரி பிரஜாபதி, ஜாமீன் கேட்டு போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த ஐகோர்ட், முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    காயத்ரி பிரஜாபதிக்கு போக்சோ கோர்ட் ஜாமீன் வழங்கினாலும், மற்ற இரண்டு வழக்குகளில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×